Ad Banner
Ad Banner
 பொது

மதங்களைப் பயன்படுத்தி முரண்பாடுகள் அல்லது சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம்

30/01/2026 06:19 PM

கோலாலம்பூர், ஜனவரி 30 (பெர்னாமா) -- நாட்டில், குறிப்பாக சமூக ஊடகங்களில் மதங்களைப் பயன்படுத்தி முரண்பாடுகள் அல்லது சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம்.

மாறாக நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக வெறுப்பு, தூண்டுதல், மற்றும் இன பாகுபாடுகளை ஒற்றுமையுடன் நிராகரிக்க வேண்டும் என்று ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவில் உள்ள இனங்கள் மற்றும் மதங்களின் பன்முகத்தன்மை, அன்பு, உன்னத மதிப்புகள் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்ப்பதோடு, சமூகத்தை ஒன்றிணைக்கும் பாலமாக அமைய வேண்டும் என்று, டத்தோ ஆரோன்  அறிவுறுத்தினார்.

அமைதியான, செழிப்பான, ஒற்றுமையான நாடாக மலேசியா தொடர்ந்து நிலைத்திருக்க, மலேசியர்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமது முகநூலில் அந்த தகவல்களை பதிவிட்டுள்ளார்.

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் புரிதலும் ஒரு நாட்டின் செழிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அடித்தளம் என்று டத்தோ ஆரோன் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)