Ad Banner
 பொது

MA63: 16 கோரிக்கைகள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன

29/01/2026 04:14 PM

ஜாலான் பார்லிமன், ஜனவரி 29 (பெர்னாமா) -- MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் சபா மற்றும் சரவாக் மாநிலங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எஞ்சிய 16 உரிமைக் கோரல்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளன.

இரண்டு கோரிக்கைகள் கொள்கை அளவில் முடிவை எட்டியுள்ளதாகவும் மற்றொன்று பகுதி அல்லது இடைக்காலமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபா மற்றும் சரவாக் விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.

''...8 கோரிக்கைகள் இன்னும் கலந்துரையாடலில் உள்ளன. எஞ்சிய 5 கோரிக்கைகள் தற்போது உயர் மட்டத்தில் விவாதத்திற்குப் பரிந்துரைக்கப்படுகின்றன'', என்றார் டத்தோ முஸ்தபா சக்முட்.

எஞ்சிய கோரிக்கைகளுக்கான தீர்வின் காலக்கெடு குறித்து கருத்துரைத்த டத்தோ முஸ்தபா சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு இடையிலான சட்ட விளக்கங்களில் உள்ள வேறுபாடுகள் உட்பட பல முக்கிய அம்சங்களைப் பொருத்தது என்று கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)