இந்தியா, ஜனவரி 29 (பெர்னாமா) -- இந்தியாவில் இருவர் நிபா கிருமிதொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதோடு இந்நோய்க் காரணமாக குறைந்தது 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
40 லிருந்து 75 விழுக்காடு வரை மரண தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும் என்றாலும் அது எளிதில் பரவாது.
மேலும், பொதுவாக பாதிக்கப்பட்ட நபருடன் நீண்டகாலத் தொடர்பு இருந்தால் மட்டுமே இந்நோய்ப் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் இந்தியாவில் இத்தொற்றுப பரவுவது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே இந்தியாவில் நிபா கிருமிதொற்று பரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாய்லாந்தின் முக்கிய விமான நிலையங்களில் உடல் உஷ்ணப் பரிசோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து விமானங்கள் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த சுவர்ணபூமி, டான் முவாங் மற்றும் ஃபூகெட் ஆகிய விமான நிலையங்களின் வாயில்களில் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன
அதேவேளையில் இந்நோயினால் இந்தோனேசியாவில் பாலி தீவு உட்பட அதன் முக்கிய விமான நிலையங்களிலும் உடல் உஷ்ணப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)