எத்தியோப்பியா, 14 நவம்பர் (பெர்னாமா) -- தெற்கு எத்தியோப்பியாவில் கிருமிதொற்று ரத்தப்போக்கு காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயினால் அறுவர் உயிரிழந்தனர்.
இதனால் இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அதன் தொடர்பில் ஆராயவும் உலக சுகாதார நிறுவனம் WHO நிபுணர்கள் மற்றும் அவசரகாலப் பொருட்களைக் கொண்ட குழுவை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
தெற்கு ஓமொ மண்டலத்தின் ஜிங்க நகரில் மருத்துவர் ஒருவர் மற்றும் தாதி ஒருவர் உட்பட அறுவர் இந்நோயினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த இரண்டு சுகாதார ஊழியர்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்குக் சிகிச்சை அளித்ததாக ஜிங்க பொது மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் செலாமு தடெசெ தெரிவித்தார்.
எனவே, இந்நோய் நோயாளிகளுடனான நெருங்கிய தொடர்பு மூலமும் பரவும் அபாயத்தை கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த தொற்றுநோய்க்கு எதிராக கண்காணிப்பு ஆய்வகப் பரிசோதனை தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சை முயற்சிகளை வலுப்படுத்த WHO-வின் 11 நிபுணர்கள் அடங்கிய குழு உதவும்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)