இந்தியா, ஜனவரி 28 (பெர்னாமா) -- இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நிபா நோய் பரவியதைத் தொடர்ந்து, அனைத்துலக நுழைவாயில்களிலும் குறிப்பாக அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சுகாதாரப் பரிசோதனை மூலம் தயார்நிலைகளை சுகாதார அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.
தொடக்கத்திலேயே இந்நோயைக் கண்டறிவது செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தீவிர கண்காணிப்பு மற்றும் நாட்டின் ஆய்வக ஆற்றலை வலுப்படுத்துவதை உள்ளடக்கி தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு
தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் உட்பட தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஏற்ப சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் நிபா நோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தைத் தடுப்பதற்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1999ஆம் ஆண்டு தொடங்கி மலேசியாவில் நிபா நோய் சம்பவங்கள் எதுவும் பதிவாவில்லை என்றாலும், பல நாடுகளில் அவ்வப்போது அத்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லை கடந்த பரவல் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு விழிப்புடன் உள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மலேசிய கால்நடை சேவை துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தீபகற்ப மலேசியாவின் தேசிய பூங்கா ஆகியவற்றுடன் இணைந்து, One Health என்ற அணுகுமுறை மூலம் நிபா நோய் குறித்த தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)