Ad Banner
 பொது

மார்ச் முதல் வெளிநாட்டவருக்கு பாக்கெட் சமையல் எண்ணெய் விற்கப்படாது

29/01/2026 03:03 PM

கோலாலம்பூர், ஜனவரி 29 (பெர்னாமா) -- வரும் மார்ச் முதலாம் தேதி தொடங்கி உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட பாக்கெட்டிலான சமையல் எண்ணெயை குடியுரிமை அல்லாதோர் வாங்குவதற்கான தடை உத்தரவு விதிமுறையை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என் அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யவிருக்கிறது.

1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் செக்‌ஷன் 6-இன் அதிகாரத்துடன், விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் உள்ள விதிகளின் அடிப்படையில் இந்த விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி  தெரிவித்தார்.

''எனவே, இந்தத் தடையின் மூலம், உதவித் தொகையின் வழி மக்கள் பயன்பெறுவதையும், வெளிநாட்டினருக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் இருப்பதையும் எங்களால் உறுதி செய்ய முடியும்.'' என்றார் டத்தோ அர்மிசான் முஹமட் அலி 

உதவித் தொகை விலையில் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்குவதற்கான தளங்களில் ஒன்றாக MyKasih தளத்தை ஒருங்கிணைப்பது குறித்து, நிதி அமைச்சசுடன் தமது அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)