Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தமிழ்நாடு தேர்தல்: வாக்களிப்பு ஏப்ரல் 23 & முடிவுகள் மே 4

16/03/2026 06:43 PM

இந்தியா, மார்ச் 16 (பெர்னாமா) -- தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில், அதன் முடிவுகள் மே நான்காம் தேதி அறிவிக்கப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதோடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவ்வாணையம் கூறியது. 

இந்நிலையில், மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி மனு தாக்கல் செய்யப்படும் என்றும், ஏப்ரல் ஆறாம் தேதி வேட்புமனுக்கான பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.  

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கும் வேளையில், ஆட்சியமைக்க 118 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படுகின்றன. 

தற்போது, திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மற்றும் மநீம ஆகியவை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. 

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் அமமுக இணைந்துள்ளன வேளையில், பாஜக-வுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. 

அதோடு நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. 

வி.கே. சசிகலாவின் புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் இம்முறை களம் காண்கிறது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]