Ad Banner
 உலகம்

15 வயதுக்கு கீழ் சமூக ஊடக பயன்பாடு; தடை செய்யும் மசோதாவை பிரான்ஸ் அங்கீகரித்தது

27/01/2026 06:21 PM

பிரான்ஸ், ஜனவரி 27 (பெர்னாமா) -- சமூக ஊடக பயன்பாட்டினால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவை பிரான்ஸ் அங்கீகரித்தது.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்படுவதற்கு முன்பு செனட் சபையில் தாக்கல் செய்யப்படும்.

சமூக ஊடகங்களினால் பாதகமான விளைவுகள் அதிகரித்து வருவதால் சிறார்களுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பரிசீலனைக்காக செனட்டில் சமர்ப்பிக்கப்படும்.

சமூக ஊடகங்களை அதிகமான பயன்படுத்தும் சிறார்களிடையே பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக அறிவியல் மற்றும் சமூக ஆதாரங்கள் உள்ளதால் இப்புதிய சட்டம் அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இப்புதிய சட்ட மசோதாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ள நிலையில் இது அந்நாட்டின் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சி என்றும் பாராட்டியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)