ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், டிசம்பர் 23 (பெர்னாமா) -- நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள், வழிகாட்டிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய உதவி போலீஸ் அதிகாரிகளுக்கான சேவையைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் மீதான கண்காணிப்பை அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் கடுமையாக்கும்.
சுய தேவைக்காக உறுப்பினர்களைப் பயன்படுத்துவது உட்பட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை இந்த கண்காணிப்பு நடைமுறை தடுக்கும் என்று புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறை ஜேபிஜேகேகேவின் துணை இயக்குநர் டத்தோ நிக் ரொஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
''உதவி போலீஸ் உதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், நடைமுறைகள், நிர்வகிப்பு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு ஒழுங்குமுறையையும் பின்பற்றுவதை எங்கள் தரப்பு கண்காணிக்கும். இது உதவி போலீஸ் சேவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும். உதாரணமாக, அதை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவது அல்லது ஏற்கனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்துவது ஆகும்'', என்றார் டத்தோ நிக் ரொஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 36வது மலேசிய உதவிப் போலீஸ் சங்கம் MAPAவின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
மேலும், தேசிய தற்காப்பு படையின் பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கக்கூடிய உறுப்பினர்களின் செயலைத் தவிர்க்க பிடிஆர்எம்மால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், வழிகாட்டிகள் மற்றும் அறிவுரைகளுக்கு ஒவ்வொரு உதவிப் போலீசும் இணங்க வேண்டும் என்று டத்தோ நிக் ரொஸ் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)