தாய்லாந்து, 27 ஜனவரி (பெர்னாமா) -- தாய்லாந்தில் நடைபெற்ற 2025 ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் மலேசியா 55 தங்கப் பதக்கங்களை வென்றதோடு, ஒட்டுமொத்த இலக்கான 181 பதக்கங்களையும் கடந்து பெருமைக்குரிய சாதனையைப் படைத்துள்ளது.
64 தங்கம் , 64 வெள்ளி மற்றும் 73 வெண்கலம் என்று மொத்தாமாக 201 பதக்கங்களைக் குவித்த மலேசிய அணியின் வீரர்கள், பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தை தற்காத்தனர்.
நேற்று நடைபெற்ற, ஆடவருக்கான நீளம் தாண்டும் போட்டியில் வோங் கார் கீ, 6.83 மீட்டர் தூரம் தாண்டி, நாட்டின் 55-வது தங்கப் பதக்க இலக்கை உறுதி செய்தார்.
இதற்கிடையில், சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை மலேசிய வீழ்த்தியது.
மலேசியா, பாரா ஓட்ட பந்தயம், பூப்பந்து போட்டி, நீச்சல் மற்றும் போலிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
நகோன் ரட்சசிமா-வில் பதிவான இந்த சாதனை, நாட்டின் பாரா விளையாட்டுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பாராலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராவதற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)