அமெரிக்கா, 27 ஜனவரி (பெர்னாமா) -- வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் கடுமையான குளிர்கால புயல் வீசியதைத் தொடர்ந்து குறைந்தது 23 பேர் பலியாகியுள்ளனர்.
பெரிய அளவில் மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான புயலால மத்திய மேற்கு தொடங்கி, கிழக்கு கடற்கரை வரையிலான பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வழுவழுப்பான சாலைகளால் நிகழ்ந்த சாலை விபத்துகள், கடும் குளிரான வானிலை,
போன்ற சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுதாக கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் பனியினால் மின்கம்பிகள் சோதமடைந்து லட்சக்கணக்கானோர் மின்சாரத் தடையால் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
அதோடு, முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சில சேவைகள் தாமதமாகின.
எனவே, பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)