பத்துமலை, ஜனவரி 31 (பெர்னாமா) -- அதிகாரப்பூர்வமற்ற வழிகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதாக நம்பப்படும் கேப்டன் பிரபா கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களைப் போலீசார் இன்னும் தேடி வருவதாகப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
அந்தக் குழுவை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் ஓடலாம் எங்களிடமிருந்து ஒருபோதும் மறைய முடியாது நாங்கள் உங்களைப் பிடிப்போம்'', என்றார் டத்தோ எம்.குமார்.
சனிக்கிழமை பத்துமலையில் திருத்தலத்தில் போலீஸ் படையின் தண்ணீர் பந்தலைப் பார்வையிட்ட பின்னர் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவர் அந்தக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரென குமார் கூறினார்.
கடந்த புதன்கிழமை திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுவின் உறுப்பினராக இருந்த மூன்று ஆடவர் சிப்பாங் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)