டேரா இஸ்மாயில் கான், 24 ஜனவரி (பெர்னாமா) -- பாகிஸ்தான், டேரா இஸ்மாயில் கான் நகரில், வெள்ளிக்கிழமை இரவு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது ஐவர் உயிரிழந்தனர்.
குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயத்திற்கு ஆளான 10 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
டேரா இஸ்மாயில் கான் அமைதிக் குழுவின் தலைவர் நோர் அலாம் மெஹ்சுட்டின் வீட்டில் திருமணத்தின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்திற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், டேரா இஸ்மாயில் கான் அமைந்துள்ள இடத்தில் தொடக்கத்தில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றன.
TTP போராளிகளுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குவதாக ஆப்கானிஸ்தான் தாலிபான்களை பாகிஸ்தான் அரசாங்கம், குற்றம் சாட்டியுள்ளது.
அவர்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கம், பாகிஸ்தானின் பாதுகாப்பு உள்நாட்டுப் பிரச்சனையாகும் என்று கூறியுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]