Ad Banner
 விளையாட்டு

2026 மலேசிய கிண்ணம்: காலிறுதிக்கு முன்னேறியது சிலாங்கூர் எஃப்.சி

24/01/2026 06:09 PM

பெட்டாலிங் ஜெயா, 24 ஜனவரி (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு மலேசிய கிண்ண காற்பந்தாட்டத்தின் காலிறுதிக்கு நுழையும் கணிப்பை நிஜமாக்கியது சிலாங்கூர் எஃப்.சி அணி.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சிC, 3-0 என்ற கோல் கணக்கில் கிளந்தானின் The Red Warriors-ஐ வீழ்த்தி 5-1 என்ற மொத்த புள்ளிகளுடன் காலிறுத்திக்கு நுழைந்தது.

பெட்டாலிங் ஜெயா மாநகராண்மை கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் உபசரணை அணியான சிலாங்கூர் கிரிகோர் புளோரஸ் மோரேஸ் மூலம் முதல் கோலை அடித்தது.

அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில், ஃபைசால் ஹலிம் சிலாங்கூருக்கான இரண்டாவது கோலை போட்ட வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தில் அவ்வணியின் மூன்றாவது கோலை, 66-வது நிமிடத்தில் மோரேஸ் அடித்தார்.

இந்நிலையில், சிலாங்கூர் அணி, இமிகிரேசேன் எஃப்.சி அல்லது நெகிரி செம்பிலான் எஃப்.சி-ஐ காலிறுதி ஆட்டத்தில் சந்திக்கவுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், கோலா திரெங்கானு, சுல்தான் மிசான் சைனால் அபிடின் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் யூ.எம் டமான்சாரா யூனைடெட் அணியை வீழ்த்தி, 7-0 என்ற மொத்த புள்ளிகளுடன் திரெங்கானு எஃப்.சி அணியும் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 

இதன்வழி அந்த அணி, காலிறுதி ஆட்டத்தில் கே.எல் சிட்டி எஃப்.சி அல்லது பேராக் எஃப்.ஏ-வை சந்திக்கவுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]