ஜகார்த்தா, 24 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டியில் சூப்பர் 500 அந்தஸ்தைக் கொண்ட இறுதி ஆட்டத்துக்கு தேர்வுப் பெற்ற முதல் மலேசிய மகளிர் ஒற்றயர் என்ற சாதனையப் படைப்பதில் லெட்ஷனா தோல்வி கண்டார்.
உலக தரவரிசையில் 42-ஆம் நிலை ஆட்டக்காரரான அவர் தாய்லாந்தின் பிச்சமோன் ஓபட்னிபுத் உடனான 41 நிமிடம் வரை நீடித்த ஆட்டத்தில், 15-21, 17-21 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.
ஜகார்த்தா, இஸ்டோரா செனாயனில் நடைபெற்ற ஆட்டத்தின் முதலாம் செட்டில் மட்டும் 3-2 என்ற புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த லெட்ச்னா பின்னர் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த நேர்ந்தது.
இரண்டாம் செட் ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிச்சமோன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், லெட்ஷனா கடும் சவாலை எதிர்கொண்டார்..
எனினும், அவரின் முயற்சிகள் அனைத்துல் தோல்வியிலேயெ முடிந்தது.
இதனிடையே, நாட்டின் முதன்மை கலப்பு இரட்டையர்களான சென் தாங் ஜி - தோ யீ வெய் இணை, சீனாவின் ஜியாங் சென் பாங் - வெய் யா சின் ஜோடியை 21-17, 21-12 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]