Ad Banner
 பொது

ஊழல், அதிகார மீறல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் பிரதமரிடம் சமர்ப்பிப்பு

23/01/2026 05:25 PM

சிலாங்கூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- ஊழல், அதிகார மீறல் அல்லது அதன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த முழு விசாரணை அறிக்கையை, சில அரசாங்க நிறுவனங்கள் இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், தேசிய தணிக்கைத் துறை, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவை அந்த நிறுவனங்களில் அடங்கும்.

''தேசிய தலைமை கணக்காளர், எஸ்.பி.ஆர்.எம், எல்.எச்.டி.என்., அம்லா மற்றும் பேங்க் நெகாரா ஆகியோரிடமிருந்து இன்று மாலை எனக்கு அறிக்கைகள் கிடைக்கும். எஞ்சிய ஊழல் மற்றும் அதிகார மீறல் சுத்தம் செய்யும் அவர்களின் பணித் தொடரும்,'' என்றார் அவர்.

தற்காப்பு அமைச்சு உட்பட கொள்முதல் விவகாரம் தொடர்பாக SPRM-இன் கண்காணிப்பில் பல அமைச்சுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

ஊழல் பிரச்சனைகள் தொடர்பான மலேசிய இராணுவப்படை, ஏடிஎம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் ஆகியவற்றின் அனைத்து கொள்முதல் முடிவுகளும், கொள்முதல் செயல்முறை முழுமையாகப் பின்பற்றப்படும் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)