மலாக்கா, ஜனவரி 24 (பெர்னாமா) -- மலாக்கா மாநிலத் தேர்தல், தற்போதிலிருந்து இரண்டு முதல் 10 மாதங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவலைக் கோடி காட்டிய அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, அம்மாநிலத்தில் சிறந்த சாதனையைப் நிலைநிறுத்த கட்சி கேந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
''வெற்றியை அடைவது கடினம் என்பதை நான் அடிக்கடி எனக்கு நினைவூட்டிக் கொள்கிறேன். ஆனால், அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது இன்னும் கடினம். வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதுதான் இப்போது நமது பணி என்பதை மலாக்காவில் உள்ள எனது நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன். கடந்த மாநிலத் தேர்தலில் நாம் எதிர்கொண்ட சிரமங்களை விட இந்தச் சிரமம் பெரிதாக இருக்க நான் விரும்பவில்லை,'' என்றார் அவர்.
இன்று, மலாக்கா, அலாயில் உள்ள தெலோக் மாஸ் சட்டமன்ற ஊழியர்களுடனான துணைப் பிரதமரின் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் இவ்வாறு கூறினார்.
தேசிய முன்னணி, முன்பு வென்ற நான்கில் மூன்றுக்கும் அதிகமான தொகுதிகளின் வெற்றியைப் தற்காப்பதே முக்கிய சவால் என்பதால், கடந்த தேர்தலை விட இந்த முறை பணி மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதையும் துணைப் பிரதமருமான அவர் மலாக்கா அம்னோ தலைமைத்துவத்துக்கு நினைவூட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)