கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் படிவத்தில் கற்றல் மதிப்பீடு மைய அளவில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அது அதிக ஆபத்துள்ள தேர்வு முறை அல்ல.
மாறாக, மாணவர்களின் அடைவுநிலையை அதிகரிக்க மேம்பாட்டிற்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் விளக்கமளித்தார்.
நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான மலேசிய கற்றல் மதிப்பீடு, எம்.பி.எம். அமலாக்கம் மாணவர்களின் அடிப்படை அடைவுநிலையை மதிப்பிடும் நோக்கத்திலானது என்றும் ஃபட்லினா சிடேக் குறிப்பிட்டார்.
குறிப்பாக எழுத்தறிவு எண் மற்றும் அடிப்படை அறிவியல் திறன்களில் அடுத்த கட்டத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் தொடக்கக்கட்ட தலையீட்டு நடவடிக்கையை மேற்கொள்ள அச்செயல்முறை வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
மூன்றாம் படிவ கற்றல் மதிப்பீடு, மொழித் திறன், அறிவாற்றல், பயன்பாடு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் செயல்முறைத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் அடைவுநிலையை மதிப்பிட உதவும் என்றும் ஃபட்லினா சிடேக் விவரித்தார்.
நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கு எம்.பி.எம்-ஐ செயல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து மக்களிடையே எழுந்த கேள்விகளினால் அவர் வியாழக்கிழமை தமது முகநூலில் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)