ஸ்பெயின், ஜனவரி 19 (பெர்னாமா) -- தென் ஸ்பெயினில் இன்று அதிகாலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர்.
மலாகா-வில் இருந்து மாட்ரிட்-க்கு பயணித்த அந்த ரயில் ஆதாமஸ் அருகே தடம் புரள்வதற்கு முன்னதாக எதிர்திசையில் உள்ள தண்டவாளப் பாதையில் நுழைந்து நேர் எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியது.
இவ்விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் இம்மோதல் சீரற்ற தடத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் தெரிவித்தார்.
கடந்தாண்டு மே மாதம் இந்த ரயில் தண்டவாளம் புதுப்பிக்கப்பட்டதாக புவென்ட் மேலும் கூறினார்.
தலைநகர் மாட்ரிட்-லிருந்து தெற்கே சுமார் 360 கி.மீ தொலைவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ள ஆதாமஸ் அருகே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)