Ad Banner
 உலகம்

தாய்லாந்து; இரயில் மீது விழுந்த பளு தூக்கும் இயந்திரம்; 25 பேர் பலி

14/01/2026 04:35 PM

பேங்காக், ஜனவரி 14 (பெர்னாமா) -- தாய்லாந்தில் கிரேன் எனப்படும் பளு தூக்கும் இயந்திரம் பயணிகள் இரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.

நக்கோன் ராட்சசிமா எனும் பதிகுயில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகப் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

அதிவேக ரயில் பாதைத் திட்டத்திற்காகப் பயன்படுத்துப்பட்டு வந்த பளு தூக்கும் இயந்திரம் இரயில் மீது விழுந்ததாக நக்கோன் ராட்சசிமா மாவட்ட போலீஸ் தலைவர் தட்சபோன் சின்னவொங் கூறினார்.

இச்சம்பவத்தினால் அந்த இரயில் தடம் புரண்டு தீப்பிடித்தக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

பேங்காக்கில் இருந்து புறப்பட்ட அந்த இரயில் உபோன் இராசதானி நோக்கிப் பயணித்ததாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பிஃபட் ரட்சகிட்பிரகர்ன் குறிப்பிட்டார்.

விபத்து நிகழ்ந்த போது ரயிலில் மொத்தம் 195 பயணிகள் பயணித்ததாகவும் பலியானவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)