புத்ராஜெயா, ஜனவரி 15 (பெர்னாமா) -- கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறியதாக மொத்தம் 14 அமைச்சுகள் அடையாளம் காணப்பட்டன.
அந்த அமைச்சுகளின் திட்ட மேம்பாட்டு செலவினங்களின் தற்போதைய நிலவரம் 87.91 விழுக்காடு என்பதால் அது தேசிய சராசரி விகிதத்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் தீவிர கவனம் தேவை என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாகார் தெரிவித்தார்.
''நான் இந்த 14 கே.எஸ்.யூ-களை அழைப்பேன். அது அவர்களின் DEEP-ஐ பாதிக்கும், அவர்களின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை அனைத்தும் பள்ளிகளுக்கான திட்டங்கள், சாலை பழுதுபார்ப்பு, அடிப்படை அரசாங்கத் திட்டங்கள், சாலைகள், ச்கிச்சையகங்கள், மருத்துவமனைகள். அவற்றின் பணிகள் தாமதமாகவே செய்யப்படுகின்றன.'' என்றார் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாகார்.
இன்று, புத்ராஹெயாவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டின் புத்தாண்டு உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷம்சுல் அஸ்ரி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)