கராகஸ், ஜனவரி 06 (பெர்னாமா) -- வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிகெஸ் அந்நாட்டின் அதிபராக நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
56 வயதானவழக்கறிஞர் ரோட்ரிகெஸ் அந்நாட்டின் தேசிய சட்டமன்றத் தலைவரான அவரது சகோதரர் ஜோர்ஜ் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
முன்னதாக மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ரோட்ரிகெஸ் தற்போது வெனிசுலாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க அமெரிக்க அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் சமநிலையான மற்றும் பரஸ்பர உறவுகளை நோக்கி பயணிப்பதற்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)