Ad Banner
 பொது

முஹமட் குர்னியாவான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

27/01/2026 03:16 PM

கோலாலம்பூர், ஜனவரி 27 (பெர்னாமா) -- கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் குர்னியாவான் நைம் மொக்தார் இன்று மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்திற்கு முன்னதாக மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கினபாத்தாங்கான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்கொண்ட  முஹமட் குர்னியாவான் 14,214 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

தமது தந்தை காலஞ்சென்ற  டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின்  கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமானதை தொடர்ந்து கினபாத்தாங்கான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனியை பிரதிநிதித்து  முஹமட் குர்னியாவான் போட்டியிட்டார்.

கடந்த 15-ஆம் பொதுத் தேர்தலில் 4,330 வாக்குகள் பெரும்பான்மையில் புங் மொக்தார் கினபாத்தாங்கான் நாடாளுமன்ற தொகுதியை தற்காத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)