Ad Banner
 விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக்; ஜேடிதி வெற்றி

05/01/2026 03:32 PM

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 05 (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகூரின் ஜெ.டி.தி 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் சிலாங்கூரைத் தோற்கடித்தது.

இதன் வழி இப்பருவத்தில் இதுவரை நடைபெற்ற 13 ஆட்டங்களிலும் ஜெ.டி.தி அணி தோல்வியற்ற சாதனையைத் தொடர்கிறது.

பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழக அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7வது நிமிடத்திலேயே ஜெ.டி.தி தனது முதல் கோலை அடித்து முதல் பாதியை முடித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் களமிறங்கிய சிலாங்கூர் அணி ஆட்டத்தைச் சமன் செய்யும் நோக்கில் தீவிரமாக விளையாடிய போதிலும் அவர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பெர்க்சன் டா சில்வா தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெ.டி.தி தனது வெற்றியை உறுதி செய்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)