பிரான்ஸ், 19 மார்ச் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு ஒர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி...
இன்று அதிகாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில், நாட்டின் ஆடவர் ஒற்றையரான ஜஸ்டின் ஹோ வெற்றி பெற்று அடுத்த ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
தைவானை சேர்ந்த சீ யு ஜென்னுடன் விளையாடிய ஜஸ்டின் ஹோ, முதல் செட்டில் 21-9 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
இருப்பினும் இரண்டாம் செட்டில், 14-21 என்ற புள்ளிகளில் ஜஸ்டின் ஹோ தோல்வி கண்டதால், ஆட்டம் மூன்றாம் செட் வரை நீடித்தது.
மூன்றாம் செட்டில் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்ட ஜஸ்டின் ஹோ, நிறைவில் 24-22 என்ற புள்ளிகளில் தமது வெற்றியை உறுதி செய்தார்.
இதனிடையே, நாட்டின் மகளிர் ஒற்றையரான வோங் லிங் சிங்கும் சிறந்த ஆட்டத்தை பதிவு செய்து அமெரிக்காவின் சாங் பெய்விங் -ஐ 21-19, 13-21, 23-21 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
இவர்களின் ஆட்டம் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
இரண்டாம் ஆட்டத்தில், வோங் லிங் சிங், இந்தியாவின் மல்விகா பேன்சொட்டுடன் மோதவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)