Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பேராக்கில் 800 வீட்டமைப்பு சாலை பழுதுபார்ப்பு பணிகளுக்கு 2 கோடி ரிங்கிட் நிதி அதிகரிப்பு

02/01/2026 05:31 PM

பேராக், ஜனவரி 02 (பெர்னாமா) -- பேராக்கில் உள்ள சுமார் 800 வீட்டமைப்பு சாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஊராட்சித் துறைக்கான ஒதுக்கீட்டில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு கே.பி.கே.டி இரண்டு கோடி ரிங்கிட்டை அதிகரித்துள்ளது.

அத்தொகையில் மஞ்சோங் நகராண்மைக் கழகத்திற்கு 50 லட்சம் ரிங்கிட்டும் தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத்திற்கு 30 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டும் தைப்பிங் நகராண்மைக் கழகத்திற்கு 31 லட்சம் ரிங்கிட்டும் வழங்கப்படும் வேளையில் எஞ்சிய தொகை பேராக்கில் உள்ள இதர மாவட்ட கழகம் மற்றும் இதர ஊராட்சித் துறைக்கு வழங்கப்படும் என்று அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

பேராக்கில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஊராட்சித் துறைக்கும் 4 கோடி ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவிருக்கும் நிலையில் அத்தொகை உள்ளூர் அரசாங்க துறையின் திறமையின் வழி0 பல்வேறு சேமிப்பு நடவடிக்கையின் மூலம் ஈட்டப்பட்டதாகும்.

''இம்மாதம் சீரமைப்புப் பணிகள் தொடங்கும். மேலும், பேராக் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 800 சாலைகள். அனைவருக்கும் நல்ல செய்தி. இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நோன்புப் பெருநாளுக்குள் முழுமையாக நிறைவடையும்.'' என்றார் ஙா கோர் மிங்

வெள்ளிக்கிழமை பண்டார் பாரு மெடான் இப்போ-விற்கு அலுவல் பயணம் மேற்கொண்டு பேராக் மாநில அரசாங்கத்திற்கு நான்கு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

ஊராட்சித்துறையின் கீழ் உள்ள 400 வீடமைப்பு சாலைகளிலும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஈப்போ மாநகராண்மைக் கழகத்திற்கு கே.பி.கே.டி 2 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்குவதாக கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி ஙா தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)