சிலாங்கூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- பெரிக்காத்தான் நேஷனலில் ஏற்பட்டுள்ள பிளவு ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையல்ல.
மடானி அரசாங்கம் நிலைத்தன்மையோடு இருப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைகளை சமாளிப்பதை உறுதி செய்ய முழு தலைமைத்துவ கேந்திரமும் கடப்பாடு கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''தற்போது முக்கியமானது என்னவென்றால், ஒருமைப்பாட்டு அரசாங்கம் இன்னும் உறுதியாக உள்ளது. மேலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களின் வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் நலன்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம் என்று உறுதி தெரிவித்துள்ளனர். மற்றவர்களின் அமைதியில்லாத நடத்தை, குழப்பம் ஏற்படுவது போன்றவை என்னுடைய பிரச்சனை அல்ல.'' என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளை உட்படுத்திய பிரச்சனைகளால் எதிர்க்கட்சி கூட்டணி தற்போது பல்வேறு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் உட்பட முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)