Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சமுராய் கத்தியால் பெற்றோரைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

02/01/2026 03:11 PM

ஈப்போ, ஜனவரி 02 (பெர்னாமா) -- கடந்த டிசம்பர் மாதத்தில், சமுராய் கத்தியைப் பயன்படுத்தி, தனது பெற்றோருக்கு கடுமையான காயம் விளைவித்த ஆடவர் ஒருவர் மீது, ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி ஹகிம் ஐனுல் ஷாரின் முஹமட் முன்னிலையில் அவ்விரு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டிருந்த முஹமட் ஐமான் சுஹய்மி என்பவர் அதை மறுத்து விசாரணைக் கோரினார்.

சம்பவத்தின் போது, சுஹாய்மி டாவி மற்றும் ஷாஹலிஸா அஹ்மாட் ஹஷிம் ஆகிய இருவரையும். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், மரணத்தை விளைவிக்கக்கூடிய சமுராய் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாக அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி, கிந்தா மாவட்டத்தில் உள்ள பண்டார் பாரு புத்ரா-வில் ஒரு வீட்டில் முஹமட் ஐமான் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326 அல்லது 326A-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, தேவைப்பட்டால் அபராதமும், பிரம்படியும் கூட விதிக்கப்படலாம்.

தனக்கென வழக்கறிஞரை நியமித்து கொள்ளதாக முஹமட் ஐமான்-னை மனநல பரிசோதனைக்காக உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்புமாறு அரச தரப்பு துணை வழக்கறிஞர் எம். ரவீணா கேட்டுக் கொண்டார்.

அக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)