கோலாலம்பூர், டிசம்பர் 28 (பெர்னாமா) -- நடிகர் விஜயின் ஜனநாயகன் எனும் புதிய திரைப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 27-ஆம் தேதி கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்றது.
அதனைக் காண சுமார் 85,000 பேர் திரண்டனர்.
அதிக எண்ணிக்கை அடிப்படையில் இந்த இசை வெளியீட்டு விழா மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை படைப்பும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
முன்னதாக, விஜயின் கடந்த கால பாடல்களும் இசை நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக அமைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)