Ad Banner
Ad Banner
 பொது

கோலாலம்பூரில் சாலைப் போக்குவரத்துத் துறையின் அதிரடி சோதனை

28/12/2025 03:49 PM

கோலாலம்பூர், டிசம்பர் 28 (பெர்னாமா) -- கோலாலம்பூரில், நேற்றிரவு சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே), மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைளில், யமாஹா Y15 மோட்டார் சைக்கிள் உட்பட 65 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த யமாஹா மோட்டார் சைக்கிள் 18 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் மாற்றி அமைக்கப்பட்டதும் அச்சோதனையில் கண்டறியப்பட்டது.

''நாங்கள் மேற்கொண்ட சோதனை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் மிகவும் அதிக செலவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில், ஒரு மோட்டார் சைக்கிளை மாற்றியமைக்கக் குறைந்தபட்ச செலவு 5,000 ரிங்கிட் வரை உள்ளது,''என்றார் அவர்.

சனிக்கிழமை இரவு, சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முஹமட் கிப்ளி அவ்வாறு கூறினார்.

ஆபத்தான சாகச முறைகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சட்டவிரோத பந்தயங்கள் போன்றவை, இந்த சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்ட முக்கிய குற்றங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)