Ad Banner
Ad Banner
 பொது

பெர்லிசில் 3 சட்டமன்றங்கள் காலியானது குறித்து அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்படும்

26/12/2025 05:58 PM

கங்கார், டிசம்பர் 26 (பெர்னாமா) -- பெர்லிஸ் மாநிலத்தில் காலியாகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் குறித்து அடுத்த வாரம் தேர்தல் ஆணையம், SPR-இடம் அறிவிக்கப்படும்.

நேற்று சுப்பிங், பிந்தோங் மற்றும் குவார் சஞ்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் காலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,எஸ்.பி.ஆர்-இடம் இது குறித்து அறிவிக்க தமது தரப்புக்கு 21 நாள்கள் அவகாசம் இருப்பபதாக பெர்லிஸ் சட்டமன்ற தலைவர் ரஸ்ஸெல் ஐசான்  தெரிவித்தார்.

பல விவகாரங்களுக்கு தீர்வு காணவிருப்பதால், மூன்று சட்டமன்ற தொகுதிகளில் காலியானதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தமது தரப்பிற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக ரஸ்ஸெல் ஐசான்  கூறினார்.

பெர்லிஸ் அரசாங்க அரசியலமைப்பின் பிரிவு 50A உட்பிரிவு ஒன்று, உட்பிரிவு A, உட்பிரிவு இரண்டிற்கு ஏற்ப, இம்மூன்று தொகுதிகளும் காலியாகின.

பெர்லிஸ் சட்டமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டாலும், மாநில அரசாங்க நிலைத்தன்மைக்காக அம்மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

பாஸ் கட்சியை சேர்ந்த சுப்பிங் சட்டமன்ற உறுப்பினர் சாட் சிமான், பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருல் அன்வார் இஸ்மாயில் மற்றும் குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ரிட்சுவான் ஹசிம் ஆகியோரை அக்கட்சி நேற்று நீக்கியது.

அதனை தொடர்ந்து பெர்லிஸ் மாநில் மந்திரி புசார் முஹமட் சுக்ரி ரம்லியும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)