Ad Banner
Ad Banner
 உலகம்

நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல்

26/12/2025 01:50 PM

நைஜீரியா, 26 டிசம்பர் (பெர்னாமா) --  நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பு மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது.

வடமேற்கு நைஜீரியாவில் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பு அங்கே வசிக்கும் கிறிஸ்துவர்களை குறிவைப்பதாக Truth Social சமூக தளத்தில் டோனல்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஆகவே, தமது உத்தரவின் அடிப்படையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவர்களைப் படுகொலை செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் ஐ.எஸ் அமைப்பு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு நைஜீரியா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)