கோலாலம்பூர், டிசம்பர் 25 (பெர்னாமா) -- 2025 ஆம் ஆண்டு தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் நாட்டின் வுஷு விளையாட்டாளர்கள் பதிவு செய்த திறமையான அடைவுநிலையின் வழி, மலேசியா திறன் கொண்ட இளம் வுஷு விளையாட்டாளர்களை கொண்டுள்ளதாக மலேசிய வுஷு கூட்டமைப்பு PWM நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
மெண்டி செபெல் சென் மற்றும் பாங் புய் யீ போன்ற விளையாட்டு வீரர்களின் சிறப்பான ஆட்டங்கள், 2027-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகளை புரிய வழிவகுக்கும் என்று PWM தலைவர் டத்தோ சோங் கிம் ஃபாட் தெரிவித்தார்.
"செபெல்லுக்கு நேரம் உள்ளது. காரணம் வுஷு போட்டியில் தைச்சி உள்ளது. பயிற்சியில் விடாமுயற்சியை கடைப்பிடிக்க நேரம் தேவை. சோர்ந்து விடக் கூடாது. முதிர்ச்சி அடைய நேரம் தேவை. தைச்சியில் அவருக்குக் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் தேவை. 2027-ஆம் ஆண்டில் பதக்கம் வெல்ல எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நான் பெருமையாகக் கூறுகிறேன். தங்கம் வெல்ல, செபெல்லுக்கு இன்னும் இரண்டு தவணைகள் தேவை," என்றார் அவர்.
மேலும், தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய வுஷு விளையாட்டாளர்களின் ஒட்டுமொத்த அடைவுநிலையில் தாம் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்,
இம்முறை நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய வுஷு விளையாட்டாளர்கள், மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் வென்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)