பென்சில்வேனியா, 24 டிசம்பர் (பெர்னாமா) -- அமெரிக்கா, கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், அதன் ஒரு பகுதி முற்றாக அழிந்த வேளையில் குறைந்தது இருவர் மரணமடைந்தனர்.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
எரிவாயு கசிவினால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அமலாக்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, அம்மாநில ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ தெரிவித்தார்.
இவ்வெடிப்புச் சம்பவத்தினால் அந்த பராமரிப்பு கட்டிட கீழ் தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், பலர் அதன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை இன்னும் ஐவரை காணவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)