Ad Banner
Ad Banner
 பொது

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் களைக்கட்டியது ஹவானா 2025 விளையாட்டு விழா

21/12/2025 06:18 PM

ஜாலான் கம்பொங் பாசிர், டிசம்பர் 21 (பெர்னாமா) -- தேசிய ஊடவியலாளர் தினம் ஹவானா 2025 விளையாட்டு விழா, இன்று பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் வழி களைக்கட்டியது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் விளையாட்டுப் போட்டிகளின் வகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலின் பரிந்துரைக்கு ஏற்ப இவ்வாண்டு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''எனவே இந்த ஆண்டு நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஏனென்றால், சில ஊழியர்கள், ஊடக நிறுவனங்கள் கடினமான விளையாட்டுகளைக் கடினமான நிகழ்வுகளை விளையாட முடியாமல் போகலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே நாங்கள் பாரம்பரிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறோம்'', என்றார் டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின்.

ஐந்து தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று பெர்னாமா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு மூவாயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசையும் வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)