Ad Banner
 உலகம்

திரிபோலியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 14 பேர் பலி

10/02/2026 05:02 PM

திரிபோலி, 10 பிப்ரவரி (பெர்னாமா) --  வட லெபனானின், திரிபோலி நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

அதன் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள வேளையில், எண்மர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய பொது தற்காப்பு தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் இமாட் க்ரைஸ் தெரிவித்தார்.

திரிபோலி நகரின் அல்-தப்பானே பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

இது, அந்நகரத்தின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும் என்பதோடு மோசமான உள்கட்டமைப்பு காரணமாக அங்கு இதுபோன்று கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுவதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதற்காக, உள்ளூர் அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அலட்சியத்தால் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)