பாகிஸ்தான், டிசம்பர் 20 (பெர்னாமா) -- ஆடம்பர பரிசுகளை குறைந்த விலையில் வாங்கியதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபி-க்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான இரண்டாவது ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் 2023-ஆம் ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
2018-ஆம் ஆண்டு பிரதமராக பணியாற்றியபோது கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருள்களை வாங்கியது விற்றது தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
மேலும், அரசாங்க ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டார் என்ற தகவல் பகிரப்பட்ட நிலையில் அதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)