Ad Banner
Ad Banner
 பொது

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 தொடங்கி ஐந்து நாள்களுக்குப் பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம்

20/12/2025 04:10 PM

பாபார், டிசம்பர் 20 (பெர்னாமா) -- இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 14 பொருள்களை உட்படுத்தி வரும் 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி டிசம்பர் வரையில் பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம் SHMMPயை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என் அமல்படுத்தவிருக்கின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் கொண்டாட்ட தினம் மற்றும் அதற்குப் பின்னர் இரண்டு நாள்களுக்கும் SHMMP அமல்படுத்தப்படும் என்று
கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.

''பண்டிகைக் காலத்தில் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒன்று சேர்ந்து விலைகளை உயர்த்த முயற்சிப்பர். எனவே இந்த அதிகபட்ச விலையின் மூலம் எந்த சூழ்நிலையிலும் ஒவ்வொரு வியாபாரியும் அதிகபட்ச விலையில் விற்பனை செய்வார்கள். அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைக் காட்டிலும் அதிகமாகக் இருக்கக்கூடாது என்பதையும் உறுதிசெய்ய முடியும். எனவே, இந்த பண்டிகைக் காலத்தில் அதிகபட்ச விலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் காரணம் இதுதான். பண்டிகைக் காலத்தில் அதிகபட்ச விலைத் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் குறிப்பாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்குக் கூடுதல் செலவுகளைக் குறைக்க உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்றார் டத்தோ அர்மிசான் முஹமட் அலி.

இன்று சபா பாபாரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு SHMMP அமலாக்கம் மற்றும் ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அர்மிசான் அதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் பொருள்களில் எலும்புள்ள ஆட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்ட வட்ட முட்டைக்கோஸ் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கேரட், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவை அடங்கும்.

பச்சை குடை மிளகாய், பெரிய வெங்காயம், பெரிய மஞ்சள் வெங்காயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, கோழி இறக்கைகள் மற்றும் சரவாக்கில் உள்ள உயிருள்ள வயதான கோழிகள் ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)