Ad Banner
Ad Banner
 பொது

மக்களுக்குப் பாதுகாப்பான, தரமான நெடுஞ்சாலை சேவை உறுதி செய்யப்படும் - எல்.எல்.எம்

20/12/2025 02:22 PM

புத்ராஜெயா, டிசம்பர் 20 (பெர்னாமா) -- நாட்டில் உள்ள 10 நெடுஞ்சாலைகளுக்கான தற்போதைய டோல் கட்டண விகிதங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்த அசராங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு இணங்க பாதுகாப்பான, சீரான மற்றும் தரமான நெடுஞ்சாலை சேவையை வழங்குவதன் மூலம் மக்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் உறுதியளித்திருக்கின்றது.

நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய..

தொடர் கண்காணிப்புகள் நடத்தப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வெடுக்கும் பகுதிகள் மற்றும் சாலையோர கார் நிறுத்தும் இடங்களை மேம்படுத்துவதோடு மின்சார வாகனத்திற்குத் தேவையான வசதிகளும் அதில் உட்படுத்தப்பட்டிருக்கும் என்று சசாலி ஹருன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நெரிசலையும் பயண நேரத்தையும் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 10 முக்கிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய தற்போதைய டோல் கட்டண விகிதங்கள அடுத்த ஆண்டிலும் அரசாங்கம் தொடர்ந்து நிலைறுத்தும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ லெக்சண்டர் நந்தா லிங்கி வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)