Ad Banner
Ad Banner
 பொது

மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; வதந்திகளைப் பரப்ப வேண்டாம்

18/12/2025 06:09 PM

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பெர்னாமா) -- மலாக்கா, டுரியான் துங்கால்-இல், மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தவறான கருத்துகளைப் பகிர வேண்டாம் என்று சமூக ஊடக பயனர்கள் உட்பட பொதுமக்களுக்கு, தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி அறிவுறுத்தியது.

தனிப்பட்ட அனுமானங்களையும், சரிப்பார்க்கப்படாத கருத்துகளையும் பரப்புவது விசாரணை செயல்முறை மட்டுமின்றி நீதி அமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் பாதிப்பாக அமையும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏ.ஜி.சி குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையை, புக்கிட் அமான் அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்புக் குழு இன்னும் மேற்கொண்டு வருவதால், அதன் நேறிமுறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று, அந்த அறிக்கையில் ஏ.ஜி.சி குறிப்பிட்டிருந்தது.

அதோடு, சம்பவம் குறித்த தகவல்கள், பதிவுகள், புகைப்படங்கள் அல்லது ஆதாரங்களைக் கொண்டிருக்கும் பொதுமக்கள், முழுமையான மற்றும் உண்மையான விசாரணையை உறுதிச் செய்வதற்காக, அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு, ஏ.ஜி.சி கேட்டுக் கொண்டது.

வெளிப்புற அழுத்தம் அல்லது பொதுமக்களின் உணர்வுகளின் அடிப்படையில் இல்லாமல், சட்டம் மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் எந்தவொரு வழக்கையும் தொடரும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஏ.ஜி.சி உறுதியளித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)