கோலாலம்பூர், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- குறிப்பிட்ட காரணங்களால் இன்னும் திரும்பச் செலுத்தப்படாத சுமார் மூன்று கோடி ரிங்கிட்டை தவிர்த்து நிலுவையில் உள்ள திரும்பச் செலுத்தப்பட வேண்டிய கிட்டத்தட்ட அனைத்து பொருள் மற்றும் சேவை வரி தொகையும் செலுத்தப்பட்டு விட்டன.
இது நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ள கோரிக்கைகள் அல்லது நிறுவன வங்கி கணக்கு போன்ற அத்தொகையைச் திரும்பச் செலுத்த முழுமையான தகவல்கள் இல்லாத வழக்குகளும் அடங்கும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
"மாண்புமிகு பாகன் மற்றும் தாசெக் கெலுகோர் ஆகியோர் ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பப்பெறும் நிலுவைத் தொகை குறித்த விவகாரத்தை எழுப்பிய போதிலும், அரசாங்கம் செலுத்தக்கூடிய அனைத்து ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்துள்ளது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். 2018ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டபோது, மொத்த நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகள் 1,900 கோடி ரிங்கிட்டை எட்டியது. சில காரணங்களுக்காக தீர்க்கப்படாத சுமார் மூன்று கோடி ரிங்கிட்டை தவிர, அனைத்து கோரிக்கைகளும் செலுத்தப்பட்டுள்ளன," என்றார் அவர்.
இன்று, மக்களவையில் நிதி அமைச்சிற்கு ஆற்றிய அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாவதத்தை நிறைவு செய்யும்போது அவர் இவ்வாறு கூறினார்.
அதிக அளவு வரி செலுத்துதல்களைப் பெற்றிருந்தாலும் வரி திரும்பப் பெறும் வழக்குகளை முறையாகக் கையாளும் கடப்பாட்டை மடானி அரசாங்கம் முறையாக நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.
வயதைப் பொருட்படுத்தாமல் நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து வரி செலுத்துவோருக்கும் வழக்குகள் தொடரப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)