Ad Banner
 பொது

எஞ்சிய உணவை சமைத்து மறுவிற்பனை செய்ய அதனைக் கழுவிய உணவகத்தை 14 நாள்கள் மூடுவதற்கு உத்தரவு

04/02/2026 04:34 PM

சிரம்பான், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- எஞ்சிய உணவை சமைத்து மறுவிற்பனை செய்வதற்காக, அதனை கழுவியதாக குற்றம் சுமத்தப்பட்ட உணவகம் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று தொடங்கி 14 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம், செக்‌ஷன் 11-இன் கீழ் அக்கடையை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், 2009-ஆம் ஆண்டு உணவு சுகாதார விதிமுறைகளின் கீழ் அபராத அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை, ஜே.கே.என்.என்.எஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய அமலாக்கத் தரப்பினர், மூன்றாம் நாள், பரிசோதனை மேற்கொள்வர் என்று ஜே.கே.என்.என்.எஸ் கூறினார்.

உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனையை ஜே.கே.என்.என்.எஸ் கடுமையைக் கருதுவதோடு, உணவு துறையில் ஈடுபடுவோர் அதன் பாதுகாப்பு அம்சங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும், உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது, கவனித்து தேர்ந்தெடுப்பதையும், தோற்றம், மணம் மற்றும் சுவையை கடைப்பிடிப்பதன் மூலமும் உணவுப் பாதுகாப்பை எப்போதும் முன்னுரிமைப்படுத்துமாறும் அது பொதுமக்களுக்குத் அறிவுறுத்தியது.

இது, நச்சுணவைத் தவிர்ப்பதற்கான எளிதான வழியாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று, கடை ஒன்றின் ஊழியர் கோழி மற்றும் இறைச்சி போன்ற மீதமுள்ள உணவை மறுநாள் மறுபயன்பாட்டிற்காக கழுவுவதாக நம்பப்படும் புகைப்படங்களும் முகநூலில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)