Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டு; காற்பந்து போட்டியில் தங்கத்தை இழந்தது மலேசியா

16/12/2025 03:42 PM

பேங்காக், 16 டிசம்பர் (பெர்னாமா) -- சீ விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களில் மிகவும் உச்ச பதக்கமாக கருதப்படும் காற்பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்வதில் மலேசியா தோல்வி கண்டுள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில், 23 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியான ஹரிமாவ் மூடா உபசரணை நாடான தாய்லாந்திடம் 0-1 என்ற நிலையில் வீழ்ந்தது.

தாய்லாந்து, ராஜமங்லா அரங்கில், நேற்றிரவு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் மலேசியா மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

50,000-க்கும் மேற்பட்ட சொந்த ஆதரவாளர்களின் முன்னிலையில் விளையாடிய உபசரணை குழு எட்டாவது நிமிடத்தில் யொட்சாகோன் புராபா மூலம் முதல் கோலைப் போட்டது.

13-வது நிமிடத்தில் மலேசியா அணி பதிலடியாக கோல் அடிக்க முயன்றபோது
தாய்லாந்து கோல்கீப்பர் அதனை தடுத்து நிறுத்தினார்.

பின்னர், 16-வது நிமிடத்தில், தேசிய அணியின் முஹமட் ஐமான் யூசோப் முஹமட் நபில் இரண்டாம் மஞ்சள் அட்டை பெற்றதால், அரங்கில் இருந்து வெளியேறப்பட்டு
ஹரிமாவ் மூடா 10 பேருடன் விளையாட நேர்ந்தது.

90-வது நிமிடம் வரை எந்த கூடுதல் கோலும் பதிவாகாத நிலையில், தாய்லாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்ற வேளையில், மலேசியா வரும் வியாழக்கிழமை
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் உடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)