சிட்னி, டிசம்பர் 15 (பெர்னாமா) -- ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா எனும் கொண்டாட்டத்தின்போது ஆயுதமேந்திய ஆடவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 38 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
இத்தாக்குதல் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் விவரித்தனர்.
அதில் கொல்லப்பட்டவர்கள் 10 லிருந்து 87 வயதுடையவர்கள் ஆவர்.
இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய இருவரும் 50 மற்றும் 24 வயதுடைய தந்தை மகன் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் மூன்றாம் நபர் ஈடுபாடு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)