Ad Banner
Ad Banner
 உலகம்

தாய்லாந்து - கம்போடிய தலைவர்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

13/12/2025 06:54 PM

கம்போடியா, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் ஏற்படுத்தியிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுக்க தாய்லாந்து - கம்போடியா தலைவர்கள் உடன் தொலைபேசி கலந்துரையாடல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதனை அடுத்து, அவ்விரு நாடுகளும் அனைத்து துப்பாக்கி தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மனெட் ஆகியோரிடம், நீண்டகாலப் போரின் விளைவு குறித்து தாம் பேசிய வேளையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவ்விருவரும் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தமது (Truth Social) சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல், கம்போடியாவும் தாய்லாந்தும் தங்கள் நாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், பல்வேறு இடங்களில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஜூலை மாதம் ஐந்து நாள் மோதலுக்குப் பிறகு, மிகக் கடுமையான சண்டையில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)