Ad Banner
Ad Banner
 பொது

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - ஏஜிசி

12/12/2025 05:26 PM

கோலாலம்பூர், நவம்பர் 12 (பெர்னாமா) --  17 பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோரை விடுவித்து விடுதலை செய்திருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, இனி மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் AGC (ஏஜிசி) முடிவு செய்துள்ளது.

பெறப்பட்ட தீர்ப்புக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னர், கேள்விக்குரிய முடிவு தொடர்பிலான மேல்முறையீட்டுப் பதிவை, இவ்வாண்டு அக்டோபர் 30-ஆம் தேதி, உயர் நீதிமன்றத்திடமிருந்து தமது தரப்பு பெற்றதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் ஏஜிசி தெரிவித்தது.

ரோஸ்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான முக்கிய சாட்சிகள் இறந்துவிட்டதோடு சிலரை இனி கண்டறிய முடியாத நிலையில்
மேல்முறையீட்டைத் தொடர்ந்தால், குற்றவியல் விசாரணையில் தேவைப்படும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை அரசு தரப்பு நிரூபிக்க முடியாது எனும் காரணத்தைக் கருத்தில் கொண்டு ஏஜிசி அம்முடிவை எடுத்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)