தாய்லாந்து, 11 டிசம்பர் (பெர்னாமா) -- 2025 தாய்லாந்து சீ விளையாட்டு போட்டி, கராத்தே ஆடவர் குழுவுக்கான போட்டியில், இன்று களமிறங்கிய தேசிய அணி மலேசியாவுக்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுத் தந்தது.
சாயெங் வாத்தானா அரசாங்க வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மலேசியாவை பிரதிநிதித்து முஹமட் ஐகால் அஸ்மாடி, முஹமட் அரிப் ஹிஷாமடி மற்றும் முஹமட் ஹஸ்னில் ஹென்ரி ஆகியோர் களமிறங்கினர்.
இதில் 23.3 புள்ளிகள் பெற்று அவர்கள் வெள்ளி பதக்கத்தை வென்றனர்.
1.2 புள்ளி வித்தியாசத்தில் உபசரணை நாடான தாய்லாந்து தங்கத்தை தட்டிச் சென்றது.
கராத்தே போட்டிக்காக, இக்குழு உருவாக்கப்பட்டு ஓர் ஆண்டு மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையில், இம்மூவரும் சிறப்பான அடைவுநிலையை பதிவு செய்திருப்பதாக பயிற்றுநர் முஹமட் நொர்ஃபர்ஹான் நொர்டின் தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் நிலையில், இந்த வெற்றி உந்துதலை வழங்கியுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
இன்று மாலை நிலவரப்படி, மலேசியா 2 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)