ஃபெஸ், டிசம்பர் 11 (பெர்னாமா) -- மொரோக்கோவின் ஃபெஸ் நகரில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவத்தில் குறைந்தது 22 பேர் பலியாகினர்.
மேலும் 16 பேர் காயமடைந்துள்ள நிலையில், புதன்கிழமை இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடரப்பட்டன.
அந்த இரண்டு கட்டிடங்களில் ஒன்று காலியாக இருந்தது.
மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய வழக்கப்படி குழந்தை பிறந்தப் பிறகு நடத்தப்படும் சடங்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.
சடங்கு நடத்தப்பட்ட கட்டிடத்தில் எட்டுக் குடும்பங்கள் வசித்து வந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)