கோலாலம்பூர், டிசம்பர் 08 ( பெர்னாமா) -- இன்றைய நவீன காலத்தில் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாடும் தேவையும் பள்ளிகளில் அத்தியாவசியமாகிவிட்டது.
அதில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவின் முயற்சியின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு SMART BOARD எனும் திறன் பலகை வழங்கும் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில், நடைபெற்ற இந்த SMART BOARD அறிமுக விழாவில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், கல்வி துணை அமைச்சர் வொங் கா வொ மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மரபு ரீதியான வெள்ளைப் பலகைகளுக்கு விடை கொடுத்து அதிநவீன திறன் பலகைளை பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடக்கமாக சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 104 தமிழ்ப்பள்ளிகளுக்கு இது வழங்கப்பட உள்ளது,
அதன் முதல் கட்டமாக இன்று கோலாம்பூரைச் சேர்ந்த 15 மற்றும் சிலாங்கூரின் 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலலை வழங்கப்பட்டன. இந்த திறன் பலகை நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் தாம் நம்புவதாக டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
''இந்த திறன் பலகையில் நிகழ்வு ஒரு வெற்றியாக கருதப்படுகின்றது, இந்த திறன் பலகை 387 தழிம் பள்ளிகழுக்கு 400 திறன் பலகைகள் கொடுக்கவுள்ளோம். உதாரணத்திற்கு, 800-கும் மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் இரு திறன் பலகைகள் 800-கும் கீழ் பயிலும் பள்ளிகளில் ஒரு திறன் பலகை கொடுப்போம்.'' என்றார் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்
நாட்டில் மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று கல்வியமைச்சர் உறுதியாக கூறியதாக கூறிய ரமணன் மித்ராவின் ஒத்துழைப்பில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்த கட்ட திட்டங்களையும் இவ்வாறு விளக்கினார்.
''நானும் துணை கல்வி அமைச்சரும் பல திட்டங்கள் செய்கின்றோம், அதில் ஒன்று தான் இந்த திறன் பலகை வழங்கும் நிகழ்வு, மேலும் மடானி கல்வி திட்டத்தில் இலவச பிரத்தியேக வகுப்பு திட்டம், TVET வழங்கவுள்ளோம், மடானியின் மூலம் மின்னியல் உபரிப்பாக வியூகம் வழங்கவுள்ளோம், பள்ளிகளுக்குத் தளவாடப் பொருட்கள் வழங்குகிறோம் காரணம் பிரதமர் கல்விக்கு அதிக முக்கியதுவம் வழங்குகிறார்.'' என்றார் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்
இதனிடையே இந்த திறன் பலகை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இலக்கவியல் கல்வியைக் கற்பிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு AI போதனையை நடத்துவதற்கும் பெரும் உதவி புரியும் என்பதை அங்கு வருகைத் தந்திருந்த சில தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்
''இந்த திறன் பலகை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இலக்கவியல் கல்வியை கற்பிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு AI போதனையை நடத்துவதற்கும் பெரும் உதவி என்று பெரிதும் நம்புகிறோம்.'' என்றார் உதயசுந்தரி முனியாண்டி.
''இலக்கவியல் கல்வி பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது, இந்த மாற்றத்திற்கு திறன் பலகை வழங்கும் இந்நிகழ்வு பெரும் உதவியாக உள்ளது.'' என்றார் சந்திரசேகரன் ராமையா.
அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதிக்குள் நாடளவில் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்த திறன் பலகை கொண்டு சேர்த்து முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)