Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சாலாவின் கடுமையான விமர்சனங்கள் லிவர்பூல் அணியைப் பாதிக்கவில்லை 

09/12/2025 05:35 PM

லண்டன், 09 டிசம்பர் (பெர்னாமா) -- லிவர்பூல் கிளப் குறித்து அதன் தாக்குதல் ஆட்டக்காரர் முஹமட் சாலா கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்த வேளையில் அந்த விமர்சனம் அணியை ஒருபோதும் பாதிக்கவில்லை என்று கோல் காவலர் எலிசன் பெக்கர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், சாலாவின் கருத்து லிவர்பூல் ஆட்டக்காரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை என்பதை எலிசன் பெக்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இண்டர் மிலானுக்கு எதிரான ஆட்டத்தை முன்னிட்டு லிவர்பூல் இத்தாலியின் மிலானுக்கு பயணமாகியுள்ளது. 

செய்தியாளர் சந்திப்புகளில், இந்த ஆட்டம் குறித்து கேட்பதைக் காட்டிலும் லிவர்பூலுக்கும் சாலாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புகைச்சல் குறித்து அறிந்து கொள்வதில் ஊடகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

லிவர்பூல் நிர்வாகி அர்ன் ஸ்லோட் உடான தமது உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கிளப்பின் அண்மைய கால மோசமான அடைவுநிலைக்கு தாம் காரணம் என்றும் கூறப்படுவது தொடர்பில் சாலா விமர்சித்திருந்தார். 

ஆயினும், லிவர்பூல் ஆட்டக்காரர்கள், அர்ன் ஸ்லோட்க்கு ஆதரவாகவே இருப்பதாக எலிசன் தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]